Shri Vedhagiriswarar Temple Thirukalukundram


Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Thirukazhukundram
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்

Thiruaklukundram Temple


இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்


God : Arulmigu Vedhagireeswarar  

Godess :Arulmigu Thiripurasundari Amman

God : Arulmigu Bhakthavatchaleswarar (தாழக்கோவில்)  

Tree : Vazhai Maram (Kathali)

Theertham : Sangu Theertham

Thirukalukundram Temple - Pooja Time !!

திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் திருக்கழுக்குன்றம்.



திருக்கழுக்குன்றம் சிவன் கோவில்



இத் திருக்கழுக்குன்ற தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன.திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சியளித்த தலம்.கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.

திருக்கழுக்குன்றம் திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஒரு சோமவாரத்தில் 1008 சங்குகளால் வேதகிரீசுவரருக்கு அபிஷேகம் நடைபெறும். அதில் இதற்கு முந்தய காலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றிய அதிசய சங்குகளும் இடம் பெற்றிருக்கும். சங்கு தீர்த்தக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.

இந்த கலியுகத்தில் பூஷா, விதாதா என்ற இரண்டு கழுகுகளாக பிறந்து இன்றுவரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். சரியாக பகல் பன்னிரெண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் திருக்கழுகுன்றம் வந்து பண்டாரங்கள் கொடுக்கும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறது என்பதை 03.01.1681 வருடம் டச்சுக்காரர்கள் இந்த அற்புத சம்பவத்தை ஆலயத்தின் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லட்சக் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.



மாணிக்கவாசகர் சுமந்த வேதகிரீஸ்வரர் திருப்பாதம்





அருள்மிகு ஆகாய ஈஸ்வரர்,திருக்கழுக்குன்றம் மலைக்கோவில்

அருள்மிகுவேதகிரிஸ்வரர்,திருக்கழுக்குன்றம் மலைக்கோவில்



Thiruaklukundram Arumigu Vedhagiriswarar Temple